
அஜித் தாயார் உடல் தகனம்; முதல்வர் விஜய், திரிஷா இரவில் நேரில் ஆறுதல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தாயார் மோகினி (84 வயது) நேற்று அதிகாலையில் இயற்கை எய்தினார். துபாயில் இருந்த அஜித் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று இரவு அஜித் வீட்டிற்குச் சென்று அவரைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். உடன் நடிகை த்ரிஷாவும் சென்றிருந்தார். அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட சிலர் நேரில் சென்றும் பலர் சமூக வலைதளங்கள் மூலமும் ஆறுதல் கூறினர்.
இன்று காலையில் அஜித்தின் தாயார் இறுதி ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. அஜித் வீட்டிலிருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்குச் சென்று தகனம் செய்தனர். சாலை நெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு, மயானத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு சென்றிருந்தனர். பின்னர் அங்கு மோகினி மணியின் உடல் தகனம் செய்யப்பட்டது.























வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்why is this disgraceful woman still clinging with him ....absolutely shameless