
மீண்டும் ரேடியோவில் கவனம் செலுத்துகிறார் ஆர்ஜே.பாலாஜி
உலக புகழ்பெற்ற ஸ்பாட்டிபை என்ற ஆன்லைன் ரேடியோவில் நாலணா முறுக்கு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த ரேடியோ உலகின் பல மொழிகளில் ஒலிபரப்பாகிறது. தமிழில் இப்போது தனது சேவையை தொடங்கி உள்ளது. 35 கோடி நேயர்களை கொண்ட பெரிய ஆன்லைன் ரேடியோ இது.
இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறியிருப்பதாவது: ஸ்பாட்டிபை நிறுவனம் முதன்முதலாக தமிழில் ஒரு ஆடியோ நிகழ்ச்சி வழங்குவதற்காக என்னிடம் கேட்டனர். நம்மை சுற்றி நடக்கும் நிறைய நல்ல விஷயங்களை வாராவாரம் திங்கள்கிழமை "நாலணா முறுக்கு" என்ற பெயரில் வழங்குகிறேன். இந்த செயலியை பதிவிறக்கம் செய்தாலே, இலவசமாக கேட்கலாம். நல்ல விஷயங்களை மட்டுமே பேசுகிற களமாகத்தான் இதை பயன்படுத்த உள்ளேன். என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!