முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு | திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு | 'ஆனந்தம்' 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி | நடிகர் தர்மேந்திராவுக்கு 'பத்ம விபூஷன்' விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார் | இயக்குனர் சேரனின் தாயார் காலமானார் | கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய் | கார்த்தி 30 துவங்கியது | மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி' | இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா? | கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி |

மலையாள சினிமாவின் சாக்லேட் ஹீரோ என இப்போதும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் குஞ்சாக்கோ போபன். அஜித்தின் மனைவி ஷாலினி கதாநாயகியாக அறிமுகமான 'அனியத்தி பிறாவு' படத்தின் மூலம் தான் இவரும் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மலையாள நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் நுழைந்து ரசிகர்களை வசப்படுத்தி வரும் நிலையில், முதன்முறையாக ரெண்டகம் என்கிற படத்தின் மூலம் தற்போது குஞ்சாக்கோ போபனும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இந்தப்படத்தின் துவக்கவிழா பூஜை இன்று நடைபெற்றது.
மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். அந்தவகையில் சுமார் 25 வருடங்கள் கழித்து அரவிந்த்சாமியும் மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் படம் இது என்றும் சொல்லலாம். இந்த படத்தை டி.பி.பெலினி என்பவர் இயக்குகிறார் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடித்த 'தீவண்டி' என்கிற வெற்றி படத்தை இயக்கியவர். நடிகர் ஆர்யா பங்குதாரராக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது.




