ஓடிடியில் லீட் பண்ணுவாரா 'லீடர்' : இந்த வாரப் பட்டியல் வெளியானது...! | திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார் | ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3' | சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம் | பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா | பிராந்திய மொழிகளை பேசுவதில் ஆர்வம் காட்டும் ஸ்ரீலீலா | வில் அம்பு பட இயக்குனர் மரணம் | ஆகஸ்ட் 14ல் சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரிலீஸ் | 42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி | எனக்கு பிடித்த படம் 'ரிதம்': அர்ஜூன் பேட்டி |

ஷங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத், சந்தியாக நடித்த காதல் படத்தில் சினிமா வாய்ப்பு தேடும் இளைஞராக நடித்திருந்தவர் பல்லு பாபு. அந்த படத்தின் கேரக்டர் பெயரான விருச்சிககாந்த் என்பதையே தனது பெயராக வைத்துக் கொண்டார்.
அதன்பிறகு சில படங்களில் நடித்த அவர் சினிமா வாய்ப்புகள் இன்றி மிகவும் சிரமப்பட்டார். உறவினர்களால் கைவிடப்பட்ட விருச்சிககாந்த் வடபழனி முருகன் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் செய்தி வெளியாகி சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்தார்கள்.
அதன்பிறகு கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பும் இல்லாமல், சினிமா வாய்ப்பும் இல்லாமல் மீண்டும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இரவு நேரங்களில் பிளாட்பாரத்திலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவிலும் படுத்து உறங்கி உள்ளார். இந்த நிலையில நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் படுத்தவர் அப்படியே மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




