
பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்குனர் மாற்றம்
அந்தப் படத்திற்குப் பின் விஜய் ஆண்டனி நடித்து சில பல படங்கள் வந்தாலும் அவற்றில் ஒரு படம் கூட "பிச்சைக்காரன்" வெற்றியை நெருங்க முடியவில்லை.
தற்போது “தமிழரசன், அக்னிச் சிறகுகள், கோடியில் ஒருவன், காக்கி" ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி ஏற்கெனவே "பிச்சைக்காரன் 2" படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அப்படத்தை "பாரம்" படத்தை இயக்கிய ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என்றார்கள்.
ஆனால், இப்போது படத்தின் இயக்குனரை மாற்றிவிட்டார். "கோடியில் ஒருவன்" படத்தை இயக்கி வரும் ஆனந்த கிருஷ்ணா "பிச்சைக்காரன் 2" படத்தை இயக்க உள்ளாராம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!