
இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஓடிடி ரிலீஸ்
தியேட்டர்களில் வெளியாக வேண்டிய இரண்டே இரண்டு படங்கள்தான் இந்த ஆண்டில் இதுவரையில் ஓடிடி தளங்களில் வெளியானது. மாதவன் நடித்த "மாறா", ஜெயம் ரவி நடித்த "பூமி" ஆகிய படங்கள் தியேட்டர் வெளியீட்டிற்காகத் தயாரிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியானது. இரண்டு படங்களுக்குமே மோசமான வரவேற்பும், விமர்சனங்களுமே கிடைத்தன.
சுமார் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு நாளை மறுநாள் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள "டெடி" படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படமாவது ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!