ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித் குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது 64வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. டிசம்பர் அல்லது ஜனவரியில் துவங்கலாம் என கூறப்படுகிறது.
அதற்குள் அஜித் 65வது படத்தை இயக்குவது யார் என்பது குறித்து செய்திகள் வெளியாக துவங்கிவிட்டன. அதன்படி, எப்.ஐ.ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் தான் அஜித் 65வது படத்தை இயக்குவதற்காக கதை கூறியுள்ளார் என்கிறார்கள். ஏனெனில், 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித் நடிக்கும் காலகட்டத்தில் மனு ஆனந்த் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்போது இருந்து இருவர்கிடையே நல்ல நட்பு உள்ளது. அதுதான் அடுத்து இந்த கூட்டணி இணைவதற்கான காரணம் என கூறப்படுகிறது.
மனு ஆனந்த் தற்போது ஆர்யா, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் ‛மிஸ்டர் எக்ஸ்' என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.




