'திரிஷ்யம்' நடிகை புகாரின் பேரில் சக நடிகை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு | கொச்சியில் நடைபெற்ற ஆஷா சரத் இளைய மகள் நிச்சயதார்த்தம் | பிளாஸ்ட் : 25 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கருப்பு : வெளியீட்டிற்கு முன்பு 'டெபிசிட்', பின்பு 'பிராபிட்' | 'மோலிவுட் டைம்ஸ்' படத்தில் மீண்டும் அசத்துவார்களா பிரேமலு பிரண்ட்ஸ்? | ஜூன் 25ல் திரைக்கு வரும் ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு வண்ணத்திரை வாய்ப்பை வழங்கிய வானொலி நாடகம் | ரசிகர்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள் : பூஜா ஹெக்டே | ஆடை குறித்து நடிகை பரீனாவின் பளிச் பதில் | நல்ல கதைக்காக காத்திருந்தது தவறான முடிவு : ஜெய் |

பூடானில் இருந்து விலை உயர்ந்த கார்களை இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாக கூறி கேரளாவில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் விலை உயர்ந்த லேண்ட்ரோவர் காரும் ஒன்று.. ஆனால் இந்த கார்களை தான் முறைப்படி அனைத்து வரிகளையும் செலுத்தி வாங்கியுள்ளதாக துல்கர் சல்மான் கூறியதுடன் அந்த கார்களை வழக்கை காரணம் காட்டி பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அவை சில காலத்திலேயே பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக சீர் கெட்டுவிடும் எனவே அந்த கார்களை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து பதில் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் துல்கர் சல்மானின் லேண்ட் ரோவர் காரை அவரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். அதே சமயம் இந்த காரை முறைப்படி அனுமதி இல்லாமல் எங்கேயும் கொண்டு செல்லக்கூடாது.. விசாரணையின் போது தேவைப்பட்ட நேரத்தில் வாகனத்தை அதிகாரிகள் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் இந்த காரை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.




