ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி |

தெலுங்கில் நானி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'தி பாரடைஸ்'. பிரபல இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் என ஐந்து மொழிகளில் மட்டுமல்லாது, பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் என இன்னும் மூன்று மொழிகளையும் சேர்த்து எட்டு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அடுத்த வருடம் மார்ச் 26ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகன் நானியின் புதிய போஸ்டர் ஒன்று இன்று காலை 10:05க்கு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த போஸ்டர் மாலை 5.05க்கு வெளியானது.
இது குறித்து அறிவிப்பை நேற்றே வெளியிட்ட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூறும்போது, ''இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட இருக்கின்றன. அதாவது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நான் எப்படி கற்பனை செய்து வைத்திருந்தேன், அவர்கள் எப்படி அதற்கேற்ற மாதிரி உருமாறி இருக்கிறார்கள் என்கிற இரண்டு விதமான போஸ்டர்கள் தான் அவை. அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படி இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்படும்'' என்று கூறியிருந்தார். அதன்படி இன்று நானியின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.