பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோரது கூட்டணியில் ஏற்கனவே சிம்மா, லெஞ்சன்ட், அகண்டா போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. கடைசியாக வெளிவந்த 'அகண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அகண்டா 2ம் பாகம் உருவாகி வருகிறது. '14 ரீல்ஸ் ப்ளஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கும் தமன் தான் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது பாலகிருஷ்ணா அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் என அறிவித்துள்ளனர். இந்தாண்டு வருகின்ற செப்டம்பர் 25ம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் படம் திரைக்கு வருகிறது. இம்மாதத்திற்குள் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறைவு செய்து சென்சாருக்கு அனுப்ப படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.