நடிகர் சங்க முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும் - மாலா பார்வதி ஆவேசம் | நான் உயிருடன் தான் இருக்கிறேன் ; வீடியோ வெளியிட்ட மம்முட்டி பட நாயகி | தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறாரா மாரி செல்வராஜ்? | 'மட்பிஷ்' படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமாகிறார் கெனிஷா | ஹிப்ஹாப் ஆதி தயாரித்த “பொருநை” ஆவணப்படம்: சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு | 'மஞ்சணத்தி' படத்தில் இணைந்த பிரபலங்கள் | லட்சுமி காந்தன் கொலை வழக்கு பட தகவல்கள் திட்டமிட்டு மறைப்பு | புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிய மோகன்லால் | சினிமாவில் வெற்றி பெற முடியாமல் போனது ஏன்? : மனம் திறந்த விக்னேஷ் | பிளாஷ்பேக் : பாலமுரளி கிருஷ்ணா இசையமைத்த தமிழ் படம் |

சென்னை வைஷ்ணவா கல்லூரி மாணவியான பவ்யா திரிகா 'கதிர்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ரியோ ராஜ் ஜோடியாக நடித்த 'ஜோ' படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது வெளியாகி உள்ள 'பன் பட்டர் ஜாம்' படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "பன் பட்டர் ஜாம் படத்தில் நான் நடித்திருந்த நந்தினி கேரக்டர் ரசிகர்களையும், விமர்சகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இன்றைய இளம் பெண்களை அந்த கேரக்டர் பிரதிபலித்ததே அதற்கு காரணம். இதற்கு முன் பல வாய்ப்புகள் வந்தபோதும் அதனை தவிர்த்தேன். வழக்கமான, ஜீவன் இல்லாத ஹீரோயின் கதாபாத்திரங்களைத் தவிர்த்து, உண்மையான நடிப்பு திறமை வெளிப்படும் கதாபாத்திரத்திற்காக காத்திருந்தேன். அதனால் சிறு இடைவெளியும் ஏற்பட்டது" என்றார்.




