
சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ்
இதுபற்றி தயாரிப்பாளர் ஆதம் பாவா நமக்கு அளித்த பேட்டியில், ‛‛இது ஒரு கிரைம் திரில்லர் கதை. சேவற்கொடி படத்தை இயக்கிய சுப்ரமணியன் இயக்குகிறார். போலீஸ் உதவி கமிஷனராக சீமான் வருகிறார். தீர விசாரிப்பதே மெய் என படத்தின் தலைப்பில் அடைமொழி கொடுத்துள்ளோம். அது தான் படத்தின் அடிநாதம். படத்தில் ஒரு துளி கூட அரசியல் இருக்காது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இன்னும் தேதி முடிவாகவில்லை, விரைவில் அறிவிப்பு வரும்"" என தெரிவித்தார்.
இதே தலைப்பில் 1979ல் ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் ஆர்சி சக்தி இயக்கத்தில் தர்மயுத்தம் என்ற படம் வெளிவந்தது. அதே தலைப்பில் இப்போது சீமான் படம் தயாராகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!