
சூர்யாவின் ரெட்ரோ விழாவில் விஜய் தேவரகொண்டா
சூர்யாவிற்கு தெலுங்கில் குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ளது. படத்தில் தெலுங்கு ரசிகர்களின் அபிமான நாயகியான பூஜா ஹெக்டேவும் நடித்திருப்பதால் அது படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்கிறது. தமிழில் இப்படத்திற்கான பிரம்மாண்ட விழாவை கடந்த வாரம் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடத்தினார்கள்.
நாளை ஐதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் சென்டரில் இப்படத்தின் விழா நடைபெற உள்ளது. அதில் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். சூர்யாவுடன் ஒப்பிடும் போது விஜய் தேவரகொண்டா ஜுனியர் நடிகர்தான். இருந்தாலும் "ரெட்ரோ" படம் இளைஞர்களுக்கான படம் என்பதால் தெலுங்கில் உள்ள இளம் ரசிகர்களைக் கவரும் விதத்தில் விஜய்யை அழைத்துள்ளார்களாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!