10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி | வாரணாசி : ராமர் Vs கும்பகர்ணன் கதை | 'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் | ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ள 'லீடர்' | அடுத்தடுத்து அறிவிக்கப்படும் புதிய படங்களின் வெளியீடுகள் | ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் |

மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு ஆடியவர் ரோபோ சங்கர். பின்னர் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அவர் 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் காமெடி நடிகர் ஆனார். பின்னர் அவர் மனைவி, மகளும்கூட நடிகை ஆனார்கள்.
அடுத்தகட்டமாக ரோபோ சங்கர் தற்போது 'அம்பி' என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாகி உள்ளார். இந்த படத்தை டி2 மீடியா நிறுவனம் சார்பில் பிரசாந்தி பிரான்சிஸ் தயாரிக்கிறார். பாஸர் ஜே. எல்வின் இயக்குகிறார். ரோபோ சங்கருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.
மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கன்னட இசை அமைப்பாளர் ஏ.பி. முரளிதரன் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி வருகிறது.