வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ் | 'டான் 3' சர்ச்சையை சமரசமாக முடிக்க ரன்வீர் சிங் முயற்சி | கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன் | தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல் | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் கிச்சா சுதீப் | எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; 'காட்டாளன்' படக்குழு வேண்டுகோள் | தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ! | ஜப்பானில் அனிமே விருது விழா : ஹாலிவுட் நடிகருக்கு ராஷ்மிகா அளித்த பதில் | 160 கோடியில் சொகுசு பங்களா கட்டி வரும் பிரபாஸ்! | ஜூன் திரைக்கு வரும் அருள்நிதியின் 'டிமான்டி காலனி-3' |

ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களை பாடலுடன் கதையாக சொல்கிறவர்கள் 'பாகவதர்' என்று அழைக்கப்பட்டார்கள். நடனம், தெருக்கூத்து, நாடகம், சினிமாவுக்கெல்லாம் முன்பு மக்களை மகிழ்ச்சி படுத்தியவர்கள் இந்த பாகவதர்கள்தான். தூய தமிழில் சொன்னால் 'கலை சொல்லிகள்'. பாகவதர்களாக ஆண்களே இருந்த காலத்தில் முதன் முதலாக வந்த பெண் சரஸ்வதி பாய்.
இவர் துணிச்சலுடன் ஆண்களுக்கு நிகராக கதை சொன்னார். அவருக்கு துணையாக அதாவது ஒத்து ஊதுகிறவராக அவரது சகோதரி ராதா பாய் இருந்தார். இருவரும் தமிழ்நாடு முழுக்க போகாத ஊர் இல்லை. கதை சொல்லாத கோவில் இல்லை. இதனால் சரஸ்வதி பாயை 'லேடி பாகவதர்' என்று அழைத்தார்கள்.
பாடலில் புகழ்பெற்றவர்கள் சினிமாவில் அறிமுகமாகி கொண்டிருந்தபோது பாகவதரான இவரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்கள். 1934ம் ஆண்டு வெளிவந்த 'பாமா விஜயம்' படத்தில் சகோதிரிகள் இருவரும் அறிமுகமானார்கள். கிருஷ்ணரின் மனைவிகளான பாமா, ருக்மணியின் கதையாக இந்த படம் உருவானது. இதில் பாமாவாக ராதா பாயும், ருக்மணியாக சரஸ்வதி பாயும் நடித்தார்கள். இவர்களுடன் ஜி.என்.பாலசுப்ரமணியம் முக்கிய வேடத்தில் நடித்தார். கே.தியாகராஜ தீட்சிதர் இசை அமைத்தார். படத்தில் மொத்தம் 59 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. மாணிக் லால் தாண்டன் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு சரஸ்வதி சகோதரிகள் ஒரு சில படங்களில் நடித்ததாகவும், கடைசி காலத்தில் வறுமையில் வாழ்ந்ததாகவும் சொல்வார்கள்.




