பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

கிறிஸ்துமஸ் விழாவின் போது ஏதாவது பிராங்க் செய்யலாம் என நினைத்து எனது சகோதரர்களுடன் இணைந்து விளையாட்டாக எடுத்த வீடியோ தான் அது என பெண்ணுடன் சுற்றியதாக வெளியான வீடியோ குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஷால் ஒரு பக்கம் நடிகர் சங்க பொறுப்புகள், இன்னொரு பக்கம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பு என பிசியாக இருந்து வருகிறார். அவரைப் போன்று பேச்சிலராக இருந்த அவரது நண்பர்கள் அனைவரும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட நிலையில் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்து அதில் இடம்பெற உள்ள திருமண மண்டபத்தில் தான் தனது திருமணம் நடைபெறும் என்று உறுதியாக கூறி வருகிறார் விஷால்.
இந்த நிலையில் இளம்பெண் ஒருவருடன் முகத்தை மூடியபடி விஷால் ஓடும் வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து வீடியோ குறித்து விஷால் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் உண்மையை கூற வேண்டிய நேரம் இது, இருப்பிடத்தின் அடிப்படையில் நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். நான் சோர்வடையும் போது எனது உறவினர்களிடம் செல்வது வழக்கம். அப்படி சென்றிருந்த போது ஏதாவது பிராங்க் செய்யலாம் என நினைத்து சகோதரர்களுடன் இணைந்து விளையாட்டாக எடுத்த வீடியோதான் அது. ஆனால் பலர் அது குறித்து வதந்தி பரப்புகின்றனர். அதற்காகவே இந்த விளக்கம். அனைவரையும் நேசிக்கிறேன்.நன்றி என கூறி உள்ளார்.




