Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன்

29 மே, 2026 - 04:32 IST
எழுத்தின் அளவு:
I-will-work-with-Vishal-Minister-Rajmohan
Advertisement

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் எச்.வினோத் உதவியாளர் ஹர்ஷா இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகும் பட அறிவிப்பை ,சென்னையில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். பின்னர், நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது ஜனநாயகன் எப்போது ரிலீஸ், டிக்கெட் விலை உயருமா? விஷால் விமர்சனம் செய்து இருக்கிறாரே என பல கேள்விகளை நிருபர்கள் கேட்டனர். அவர் அளித்த பதில்...

முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் சென்சார் வாங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகன் மட்டுமல்ல வேறு எந்த படத்தையும் அரசியல் காரணங்களுக்காக நிறுத்த முடியாது. ஜனநாயகன் படத்தில் முதலமைச்சர் விஜய் என்று திரையில் பெயர் வருமா என்று கேட்கிறார்கள், எங்களை பொறுத்தவரையில் அவர் எங்களுக்கு என்றுமே தளபதி.

சினிமாத்துறை என்பது மிகப்பெரிய தலைவர்களை உருவாக்கிய தாய் மடி. அதனால் திரைத்துறை சார்ந்த எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதனை பரிசீலித்து நிர்வாக ரீதியாக சரி செய்யபடும். ஐ மேக்ஸ், அதி நவீன தொழிநுட்பம் போன்ற திரையரங்கிற்கு டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. அதன்படி விலை உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு? டிக்கெட் விலை என்றைக்குமே மக்களுக்கு சுமையாகிவிட கூடாது என்பதில் தமிழக அரசு தெளிவாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. இங்கே அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு ஒரு விலை நிர்ணயம் செய்யலாம்' என்றார்.

மேலும் பேசியவர் நான் ஆசைப்பட்டதெல்லாம் செய்வதற்கு அருமையான மனைவி, பெற்றோர்கள் கிடைத்தார்கள். அதேபோல் அரசியலிலும் நான் இருக்கேன் வா என்று சொல்வது போல் என்னுடைய அண்ணன் கிடைத்தார். இந்த பொறுப்பை மக்களோடு தொடர்பு கொள்ளும் ஒரு கருவியாக தான் பார்க்கிறேன். சிறிய படங்களுக்கு பல ஆண்டுகளாகவே அதற்கான மானியம் கூட சரியாக சென்று சேரவில்லை. இதன் பிறகு முறையான ஒரு கமிட்டி அமைத்து எவையெல்லாம் சரி செய்ய முடியுமோ அதை கவனித்து விரைவில் ஒரு அறிவிப்பு வரும். சிறிய படங்கள் தான் தமிழ் சினிமாவின் ஆக்சிஜன். சிறிய பட்ஜெட் படங்களை ஒருபோதும் கைவிட மாட்டோம், நாங்கள் துணை நிற்போம். வேறு சில நிர்வாக பிரச்னையால், காரணங்களால் தியேட்டர் பார்க்கிங் கட்டணம் இப்போது உயர்ந்து இருக்கலாம்'' என்றார்

சமீபத்தில் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தற்கு நடிகர் விஷால் விமர்சனம் செய்து இருக்கிறாரே என்ற கேள்விக்கு 'எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தற்கு விமர்சனம் செய்த நண்பர் நடிகர் விஷாலுக்கு சேர்த்து வேலை பார்ப்பேன். அவர் நம்பிக்கையை பெறும் வகையில் சிறப்பாக பணியாற்றி தளபதி பெயரை காப்பாற்றுவேன். என்னை அவருக்கு தெரியாமல் இருக்கலாம். நான் அவர் படங்களை பார்த்து இருக்கிறேன். எனக்கு அவரை பிடிக்கும். என் தொகுதியில் உள்ள சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில், ஒரு உதவி இயக்குனர் மகனாக முதல்வர் பிறந்தார். அவர் பிறந்தநாள் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்குவதை பல ஆண்டுகளாக வைத்து இருக்கிறோம். அன்று பல நலத்திட்டங்களை வழங்குவோம். அது எங்களுக்கு கொண்டாட்டம். அந்த நாளில் ஜனநாயகன் வந்தால் அது எங்களுக்கும் பண்டிகை'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்'40 வருடங்களை நிறைவு செய்யும் ... சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! சமந்தாவின் மா இண்டி பங்காரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap