ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய கிளாமர் விமர்சனம் : மன்னிப்பு கேட்ட 'பெத்தி' இயக்குனர் | ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? |

தீபாவளி வந்த பின் அடுத்த இரண்டு வாரங்களுக்கு முக்கியமான படங்களை வெளியிட மாட்டார்கள். தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் எப்படியாவது இரண்டு வாரங்களாவது தாக்குப் பிடித்து ஓடிவிடும் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம். தீபாவளிக்கு வெளியான நான்கு படங்களில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் மட்டும் எப்படியாவது இரண்டு வாரத்தைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கிறார்கள்.
இந்த வார வெள்ளிக்கிழமையான நவம்பர் 17ம் தேதி முக்கிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இரண்டு சிறிய படங்கள் மட்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த், அவிதேஜ் ரெட்டி நடித்துள்ள 'சைத்ரா' படமும், 'அம்புநாடு ஒம்பது குப்பம்' படமும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் அறிவிப்பைத் தவிர வேறு படங்களின் அறிவிப்பு வரவில்லை.
அதே சமயம் நவம்பர் 24ம் தேதி, டிசம்பர் 1ம் தேதிகளில் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன.