நடிகர் கவுண்டமணி பற்றி பலரும் அறிந்திராத விஷயங்கள் | இயக்குனர், நடிகருக்கு அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன் | ஜூன் 5க்கு தள்ளிப்போன ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் | பிளாஷ்பேக்: ஆங்கில கதையின் தழுவலில் வந்து, அபார வெற்றியைப் பெற்ற “மனோன்மணி” | விக்னேஷ்சிவன் அப்படி செய்திருக்ககூடாது: நடிகை சோனா | முதல்வர் விஜய் இரட்டை வேடம் போடுங்க : கூல் சுரேஷ் திடீர் வேண்டுகோள் | அண்ணன் இளையராஜா பற்றி தவறான தகவல் பரப்பாதீர்கள் : தம்பி கங்கைஅமரன் ஆதங்கம் | அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி | சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்' | 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மீனாட்சி சேஷாத்திரி |

அறம் புரொடக்ஷன் சார்பில் ராமலிங்கம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக 'P 2' என்று டைட்டில் வைத்துள்ளனர். கன்னடம், தெலுங்கு உட்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.
சமீபத்தில் வெளியாகி பரவலான பாராட்டுகளை பெற்ற 'யாத்திசை' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த சித்து குமரேசன் இந்த படத்தின் மூலம் ஹீரோயின் ஆகிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பின் தேவா இசையாமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
சிவம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது “ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். நம்பிக்கை துரோகத்தை மையப்படுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறோம். படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது” என்றார்.




