மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் | கமலை பார்க்க வேண்டும் என்று சொன்னதுமே அழைப்பு வந்தது : சிங்கம்புலி | விஜய் ரசிகர்களின் தெய்வீகமான அன்பு : பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி | துரந்தர் பட ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் | 3 மணி நேரத்திற்கு மேல் ‛கர' : குறைக்க சொன்ன தயாரிப்பாளர் |

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள பொரங்கி என்னும் பகுதியில் நடைபெற்ற என்.டி.ஆர்., நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்சினிமா மூலம் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் அதே போல் ஆந்திரா மாநிலத்திலம் சினிமா மூலம் அரசியலலுக்கு வந்து முதல்வரானவர் நந்தமுரி தாரக்க ராமராவ் என்ற என்.டி.ராமராவ். தெலுங்கு சினிமா மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ரசிகர்களை கொண்டிருந்தார்.
கடந்த 1950 ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க துவங்கிய ராமராவ் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடவுள் வேடத்திற்கு பொருத்தமானவர் .
தொடர்ந்து அரசியலில் பங்கேற்ற ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை துவக்கினார். மேலும் மக்களை சந்திக்கும் வகையில் சுமார் 7,500 கி.மீ தொலைவிற்கு பயணம் செய்துள்ளார். இதற்காக பிரத்யேகமாக வாகனத்தை தயார் செய்தார். அதற்கு சைதன்யரதம் என்றும் பெயரிட்டார். 1986 ம் ஆண்டில் நடைபெற்ற ஆந்திரா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 294 இடங்களில் 202 இடங்களை பெற்றார். தொடர்ச்சியாக மூன்று முறை மாநில முதல்வராக பதவி வகித்தார். சுதந்திரம் பெற்ற பின்னர் மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. எம்.ஜி.ஆர் மீது தனி பாசம் வைத்திருந்த என்.டி.ராமராவ் எம்.ஜி.ஆர். உடல்நல குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த போது அ.தி.மு.க..,விற்காக தமிழகத்தில் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது நூற்றாண்டு விழா இன்று (28 ம் தேதி ) கொண்டாடப்பட்டது. விழாவில் நடிகர் ரஜினி, நடிகர் ராமராவின் மகன் பாலகிருஷ்ணா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் பங்கேற்ற சென்ற ரஜினியை விமான நிலையத்திற்கே வந்து அழைத்து சென்றார் பாலகிருஷ்ணா. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.




