பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது முரளி ராமசாமி தலைமையிலான நிர்வாகிகள் உள்ளனர். தற்போது 2023&2026ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வருகிற மார்ச் 26ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜனவரி 23ம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், சங்கத்தின் விதிப்படி நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்தலாம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி சங்கத்தின் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 26ல் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவர்களுக்கு பிப்ரவரி 23ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை மார்ச் 2ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களைத் திரும்பப் மார்ச் 5ம் தேதி கடைசி தினம். அன்றைய தினம் இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். மார்ச் 26ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.