66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத் | எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? | 98வது ஆஸ்கர் : 6 விருதுகளை குவித்த ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' | மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ? | ஆன்லைன் மோதல், ரசிகர்கள் சண்டை வேண்டாம் - பவன் கல்யாண் அட்வைஸ் | 10 நாட்கள் நடித்த நிலையில் கமல் வெளியேறியதால் நின்று போன படம் ; இயக்குனர் பாலச்சந்திர மேனன் புது தகவல் | ‛மகாராஜா 2' கதை தயார் ; உறுதிப்படுத்திய விஜய்சேதுபதி | இரண்டாவதாக பெண் குழந்தை பெற்ற பூர்ணா ; பிறந்த நாளன்றே பெயரும் சூட்டினார் |

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியால் இந்திய அளவில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டதோடு வெளிநாடுகளிலும் பாராட்டப்படுகின்ற, தேடப்படுகின்ற ஒரு இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் சாங் என்கிற பிரிவில் மிக உயரிய விருதான கோல்டன் குளோப் விருதை வென்றது. தற்போது விரைவில் அறிவிக்கப்பட உள்ள ஆஸ்கர் விருதுக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.
இந்த நிலையில் சர்ச்சையான கருத்துக்களை எப்போதுமே கூறி வரும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, ராஜமவுலி குறித்து புகழ்ந்து கூறும் விதமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சமீபத்தில் ராஜமவுலியும் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனும் சந்தித்து உரையாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள ராம்கோபால் வர்மா இயக்குனர்கள் கா ஆசிப், ரமேஷ் சிப்பி ஆகிய இயக்குனர்களை எல்லாம் ராஜமவுலி ஓவர்டேக் செய்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும், “ராஜமவுலி சார்.. தயவுசெய்து உங்களது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள்.. ஏனென்றால் இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட அளவிலான இயக்குனர்கள் உங்கள் மீதான பொறாமையால் உங்களைக் கொல்வதற்காக ஒரு புதிய ஸ்குவாட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.. தற்போது குடித்திருப்பதால் இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.
அவர் இந்த விஷயத்தை சீரியஸாக கூறுவது போல தோன்றினாலும் உண்மையில் ராஜமவுலிக்கான மிகப்பெரிய பாராட்டாகவே இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி கூறியுள்ளார் என்று தெரிகிறது.




