12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் கிச்சா சுதீப் | எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; 'காட்டாளன்' படக்குழு வேண்டுகோள் | தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ! | ஜப்பானில் அனிமே விருது விழா : ஹாலிவுட் நடிகருக்கு ராஷ்மிகா அளித்த பதில் | 160 கோடியில் சொகுசு பங்களா கட்டி வரும் பிரபாஸ்! | ஜூன் திரைக்கு வரும் அருள்நிதியின் 'டிமான்டி காலனி-3' | கருப்பு வெற்றி : ஆர்ஜே பாலாஜியைப் பாராட்டிய ரஜினிகாந்த் | 'அரசன்'க்கு அடுத்து சிம்புவை இயக்கும் கீர்த்தீஸ்வரன்! | சிரஞ்சீவிக்காக மனம் மாறிய தியேட்டர் அதிபர்கள் | 5 காட்சிகளை ஆரம்பித்து வைத்த முதல் படமாக 'பிளாஸ்ட்' |

இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். டி.ராஜேந்தரின் மகனும், நடிகருமான சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா சென்று அப்பாவின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று நலமான டி.ராஜேந்தர் அமெரிக்காவில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். அவருடன் மனைவி உஷா, மகன் குறளரசன் ஆகியோர் உடனிருந்து கவனித்து கொண்டனர்.
இந்நிலையில் முழுமையாக குணமாகி நாளை(ஜூலை 22) அதிகாலை சென்னை திரும்புகிறார் டி.ராஜேந்தர். பூரண நலம் பெற்றதை தொடர்ந்து வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும் கால்டுவெல் ஆகியோர் டி.ராஜேந்தரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மகன் குறளரசன், மகள் இலக்கியா உள்ளிட்ட குடும்பத்தாரும் அவருடன் நாடு திரும்புகின்றனர்.
சென்னை வந்த பின் முதலில் தனது சிகிச்சைக்காக உதவி செய்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி கூறுகிறார் டி.ராஜந்தர்.




