பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

எப்போதும் பரபரப்பு கிளப்பி வருகிறவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சமீபகாலமாக வில்லங்கமான படங்களை இயக்கி அதன் மூலம் கடும் விமர்சனத்தையும், வசூலையும் பெற்று வருகிறார். கடைசியாக அவர் இயக்கிய டேன்ஞ்சர் என்கிற படம் லெஸ்பியன் உறவை அப்பட்டமாக சித்தரிக்கும் படமாக இருந்தது. எதிர்ப்புகள் காரணமாக படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார் கூறப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை மையமாக வைத்து 'திஷா என்கவுன்டர்' என்ற படத்தை தயாரித்து இயக்கினார்.
இந்தப் படத்துக்காக, ஹைதராபாத் அருகிலுள்ள குகட்பள்ளியைச் சேர்ந்த கே.சேகர் பாபு என்பவரிடம் 56 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார் ராம் கோபால் வர்மா. இந்த பணத்தை படம் வெளிவரும்போது தந்து விடுவதாக சொன்ன ராம்கோபால் வர்மா சொன்னபடி திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து மியாபூர் போலீசில் ராம் கோபால் வர்மா மீது சேகர் பாபு பணமோசடி புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து ராம்கோபால் வர்மா மீது போலீசார் பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.




