
தயாரிப்பாளர், இயக்குனர் பாபா விக்ரம் காலமானார்
83 வயதான பாபா விக்ரம், முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு அன்ன பாபா ஆலயம் என்ற பெயரில் சாய்பாபாவுக்கு ஓர் ஆலயத்தை நிறுவி வழிபாடு செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளில் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு லட்சுமி என்கிற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!