
புலி பல்லுடன் போஸ் கொடுத்த பிக்பாஸ் நட்சத்திரம் கைது
அதை நிஜமான புலி பல் தான் என்று வெளிப்படையாகவும் நிகழ்ச்சியில் பேசி வந்தார். புலி பல் வாங்குவதோ, விற்பதோ, வைத்திருப்பதோ இந்திய வன பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இதனால் இதுகுறித்து பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் புகார் செய்யவே கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகளும், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் காவல் நிலைய அதிகாரிகளுகம் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று சந்தோஷை கைது செய்தனர். பின்னர் அவர், பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்து ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!