'டான் 3' சர்ச்சையை சமரசமாக முடிக்க ரன்வீர் சிங் முயற்சி | கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன் | தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல் | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் கிச்சா சுதீப் | எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; 'காட்டாளன்' படக்குழு வேண்டுகோள் | தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ! | ஜப்பானில் அனிமே விருது விழா : ஹாலிவுட் நடிகருக்கு ராஷ்மிகா அளித்த பதில் | 160 கோடியில் சொகுசு பங்களா கட்டி வரும் பிரபாஸ்! | ஜூன் திரைக்கு வரும் அருள்நிதியின் 'டிமான்டி காலனி-3' | கருப்பு வெற்றி : ஆர்ஜே பாலாஜியைப் பாராட்டிய ரஜினிகாந்த் |

மலையாள திரையுலகில் இரண்டாம் நிலையில் உள்ள நடிகர்களில் மினிமம் கியாரண்டி நடிகராக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ஜெயசூர்யா. தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் மீது நில ஆக்கிரமிப்பு தற்போது கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2016ல் ஜெயசூர்யா கொச்சி கடவந்தரா பகுதியில் தான் வசிக்கும் வீட்டின் அருகில் உள்ள சிலவன்னூர் ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள 3.7 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும் அப்படி ஆக்கிரமித்த இடத்திற்கு இடத்தை சுற்றி தடுப்புச்சுவர் எழுப்பி உள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதேசமயம் அப்போது அந்த வழக்கு விசாரணையின்போது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், அது புறம்போக்கு நிலம் என்றாலும் குழந்தைகள் விளையாடும்போது ஏரிகள் தவறி விழுந்து விடாமல் இருக்கவே சுற்றுச்சுவர் அமைத்தேன் என்றும் அதனால் அதை இடிக்கக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தார் ஜெய்சூர்யா.
அப்போதைக்கு நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்பை இடிக்க இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில்தான் அந்த வழக்கு சூடுபிடித்து ஜெயசூர்யா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவிற்கு தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.




