மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சுவரா பாஸ்கர். இவர் தனுஷ் நடித்த ராஞ்சனா, கங்கனா ரணாவத், மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
சுவரா பாஸ்கர், எப்போதுமே துணிச்சலாக தனது சர்ச்சை கருத்துகளை வெளிப்படுத்துபவர். தனது அதிரடி கருத்துக்களால் அவ்வப்போது செய்திகளில் இடம்பிடிப்பார். தற்போது அவர் தெரிவித்த கருத்து ஒன்று சமூகவலைதளங்களில் அவருக்கு எதிராக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக சுவரா பாஸ்கரை கைது செய்யக் கோரும் பதிவுகள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.
இந்த சர்ச்சைக்கு காரணம் சுவரா பாஸ்கரின் டுவீட். அதில், "தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது. அதேபோல் இந்தியாவில் இந்துவா தீவிரவாதமும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது" என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்துத்துவ தீவிரவாதத்தைப் பொறுத்துக்கொண்டிருக்கும் நாம், தாலிபனில் நடக்கும் தீவிரவாதத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறோம். நம் மனிதமும் அறமும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் அடையாளம் சார்ந்த ஒன்றாக இருக்கக்கூடாது." என்றும் கூறியிருந்தார்.
இந்தக் கருத்து வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்துத்துவா என்பதுடன் தீவிரவாதத்தை அவர் இணைத்துப் பேசியிருப்பதும், ஆப்கானிஸ்தானில் நடப்பதுதான் இந்தியாவிலும் நடக்கிறது என்று ஒப்புமைப்படுத்திப் பேசியிருப்பதும் பெரும் சர்ச்சையாகி வெடித்திருக்கிறது. அப்படி உங்களுக்கு இந்துத்துவா உடன், இந்துஸ்தானில் வசிக்க பிரச்னையாக இருந்தால் பாகிஸ்தான், வங்காளதேசம், துருக்கி, குவைத், ஈராக் போன்ற அமைதியை விரும்பும் மக்களுடன் சென்று மகிழ்ச்சியாக வாழுங்கள்" என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.




