என் தந்தையையும் சட்டையை கழற்ற வைத்தார் சல்மான் கான் ; நடிகர் வருண் தவான் தமாஷ் பேச்சு | நடிகர் சங்கத்தின் ஒற்றுமைக்காக மம்முட்டி, மோகன்லால் தலையிட வேண்டும் ; பிரித்விராஜ் அம்மா கோரிக்கை | அல்லு அர்ஜுன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கிரிக்கெட் வீரர் | ராஜினாமா செய்த திரிஷ்யம் நடிகை பகிரங்க குற்றச்சாட்டு ; நடிகர் சங்கத்திற்குள் சலசலப்பு | முதல்வர் நடிப்புக்கு முழுக்கு... முன்னாள் துணை முதல்வர் ரீ என்ட்ரியா? | தவறுதலாக கிரிக்கெட்டை கால்பந்தாக மாற்றிய ராம்சரண் ; கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் மன்னிப்பு கேட்டார் | ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் |

பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன், 80. தற்போதும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பொதுவாக படப்பிடிப்பு தளத்திற்கு நேரம் தவறாமல் செல்லக்கூடியவர் அமிதாப். அப்படிதான் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டில் இருந்து காரில் சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக கடும் போக்குவரத்து நெரிசலில் அவர் மாட்டிக் கொண்டார்.
இதனால் படப்பிடிப்புக்கு நேரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக காரை விட்டு இறங்கிய அமிதாப், சாலையில் சென்ற ஒருவரிடம் பைக்கில் லிப்ட் கேட்டு படப்பிடிப்புக்கு சென்றார்.
இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்துள்ள அமிதாப், ‛‛நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் என்னை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு உரிய நேரத்தில் டிராபிக் சிக்கல்களை தவிர்த்து கொண்டு வந்து சேர்த்தீர்கள். ரைடுக்கு நன்றி நண்பா. தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.