Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

நினைத்தது யாரோ

 • நினைத்தது யாரோ
 • ரெஜித் மேனன்
 • நிமிஷா சுரேஷ்
 • இயக்குனர்: விக்ரமன்
01 பிப்,2014 - 15:16 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நினைத்தது யாரோ

நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


ஹீரோ ஒரு உதவி இயக்குநர். ஒரு நாள் ஷூட்டிங்க் ஸ்பாட்ல ஹீரோயினை சந்திக்கறார். ஒரே ஒரு சீன்ல சும்மா தலையை மட்டும் காண்பிச்சுட்டு போங்க என்ற வேண்டுகோளுக்காக அவரும் நடிக்கிறார். அதனால் காலேஜில் அவர் பேர் கெடுது. ஹீரோயினுக்கு செம கடுப்பு. ஹீரோவைக்கண்டாலே பயந்து ஓடுறார். ஹீரோ விடாம ஹீரோயின் பின்னாலயே சுத்தி எப்படியோ கரெக்ட் பண்ணிடறார். 2 பேரும் லவ்விங்க்.

சொர்ணமுகி படத்தில் வருவது போல் ஹீரோ ஒரு வருசம் ஜெயிலுக்குப்போறார், தான் செய்யாத ஒரு குற்றத்துக்காக. அந்த சைக்கிள் கேப்ல ஹீரோயினுக்கு ஒரு கோடீஸ்வரன் கூட மேரேஜ் ஆகிடுது. அவர் மவுன ராகம் மோகன் மாதிரி ஜெண்ட்டில் மேன். ஹீரோயின் சோகமா இருப்பதைப்பார்த்து உன் பிளாஷ் பேக் என்னனு கேட்கிறார். புருசனா நினைச்சு சொல்லவேணாம், ஃபிரண்டா நினைச்சு சொல்லுங்கறார்.

ஹீரோயின் சொந்தக்கதை, காதல் வந்த கதை எல்லாம் எடுத்து விடுது. கடுப்பான புருஷன் டைவர்ஸ் பண்ணிடுறார். இதுல தமிழ் சினிமா செண்ட்டிமெண்ட் என்னான்னா புருஷன் - பொண்டாட்டிக்குள்ளே அந்த விஷயம் ஏதும் நடக்கலை.

காதலிக்கு மேரேஜ் ஆன மேட்டர் தெரிஞ்சு ஹீரோ தேவதாஸ் ஆகி மப்பில் 24 மணி நேரமும் இருக்கார். அவரை பழையபடி சரி ஆக்கி பெரிய டைரக்டர் ஆக்கனும்னு ஹீரோயின் பாடுபட்டு கூடவே இருந்து உதவி இயக்குநரை, இயக்குநர் ஆக்கிடுறார். ஹீரோ கிட்டே ஃபிரண்ட்ஸ் எல்லாம் உசுப்பேத்தறாங்க . அதான் படமும் இயக்கியாச்சு , காதலிக்கும் டைவர்ஸ் ஆயாச்சு , மேரேஜ்க்கு அப்ளை பண்ணுங்கறாங்க .க்ளைமெக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அது என்ன என்பதை வெண் திரையிலோ, ஒரு மாசம் கழிச்சு சின்னத்திரையிலோ காண்க.

விக்ரமன் பேக் டூ பார்ம். படம் போட்ட முதல் 2 ரீல்களில் 5 காதல் ஜோடியை காட்டி எல்லாரும் காதலை தூற்றுவது போல் எல்லாம் சீன் வெச்சு இதென்ன, தேறாது போலயே என எண்ண வைத்து, பின் டர்ன் அடிச்சு மெயின் கதைக்கு வந்து தான் எப்போதும் பாசிட்டிவ் அப்ரோச்சர், தன் திரைக்கதையில் வில்லனுக்கே வேலை இல்லை என நிரூபிக்கிறார் .

ஹீரோ புதுமுகம் ரேஜித் மேனன், ஏதோ கேரளா பார்டர் ஆள் போல. மிக மென்மையான, பெண்களை கவரும் மோகன் போன்ற முகச்சாயல் உள்ள ஆள். அசால்ட்டா நடிச்சிருக்கார். பாடல் காட்சிகளில் மட்டும் லேசான தடுமாற்றம். மற்ற படி ஓக்கே, நல்ல எதிர் காலம் உண்டு.

ஹீரோயின் புதுமுகம் நிமிஷா. ஒரு நிமிசத்தில் மனதில் பதியும் குடும்பப்பாங்கான தோற்றம். இவர் அணியும் கண்ணிய உடைகள் விக்ரமன் பிராண்ட். டீசண்ட் டிரஸ் செலக்சனில் விக்ரமன் எப்போதும் பேர் எடுத்தவர், இதிலும் நிரூபிக்கிறார்.

படத்தில் ஓப்பனிங்கில் வரும் கிளைக்கதைகள் தேவை இல்லாதது . அதே போல் இடைவேளைக்குப்பின் ஹீரோ எடுக்கும் ஷூட்டிங்க் காட்சிகள் தாவணிக்கனவுகள் படத்தை நினைவு படுத்தி இருக்கு. அதிலும் எடிட்டிங்கிலும் கவனம் செலுத்தி இருக்கலாம்

பாடல் காட்சிகளில் வழக்கம் போல் அனைத்தும் மெலோடி தான். கை ரேகை போலத்தான் காதல் எனும் பாடல் அள்ளிக்குது கவிதை நயம் மிக்க வரிகள், படமாக்கிய விதமும் சூப்பர்.

அஜித்தின் மச்சான் தான் ஹீரோயினுக்கு கணவர் ரோல். நல்லா பண்ணி இருக்கார். இவர் கதிரின் காதல் வைரஸ்-ல் ஹீரோவாகவும், சமீபத்தில் வந்த நேர் எதிர்-ல் வில்லனாகவும் வந்தவர்.

வழக்கமாக விக்ரமன் படங்களில் வரும் ல ல லால ல இதில் மிஸ்சிங்க். அதே போல் ஒளிப்பதிவிலும், லொக்கேஷனிலும் வழக்கமான பாணியில் இருந்து விலகி காலத்துக்கு ஏற்ப தன்னைப்புதுப்பிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளில் மட்டும் இன்னும் பூவே உனக்காக பாதிப்பு.

ஹீரோ படம் எடுக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் தேவை இல்லாமல் பாடல் காட்சியில் விஜயை இமிடேட் செய்கிறார். அவர் வரும் காட்சிகள் எரிச்சல்.

ஹீரோயின் தங்கையாக வருபவர் அச்சு அசல்(முகச்சாயலில்) ஷகீலாவின் தங்கை போல் இருக்கார்.

ஹீரோ - ஹீரோயின் இடைப்பட்ட காதல் மலரும் காட்சிகள் கவி நயம்.

சி.பி.கமெண்ட் - காதலர்கள், விக்ரமன் ரசிகர்கள், பெண்கள் பார்க்கலாம். நினைத்தது யாரோ - ஒரு உதவி இயக்குநரின் எளிமையான காதல் கதை. க்ளைமாக்ஸ் டுவிஸ்ட் குட்.வாசகர் கருத்து (3)

sekar - saudi  ( Posted via: Dinamalar Android App )
07 பிப்,2014 - 23:17 Report Abuse
sekar naan innum paakala
Rate this:
0 members
0 members
0 members
Muthu Mbm - tamil nadu,இந்தியா
06 பிப்,2014 - 12:00 Report Abuse
Muthu Mbm இந்த படம் விக்ரமனுக்கு ஒரு வெற்றி படம்
Rate this:
0 members
1 members
0 members
chinnu - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
04 பிப்,2014 - 22:22 Report Abuse
chinnu நானும் இந்த படத்த பாக்கலாம்னு தி்யேட்டர் தி்யேட்டரா ஓடரேன், எங்க படம் ஓடுகிறதுன்னு என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. யாராவது கோயமுத்தூர்ல படம் எங்க ஓடுதுன்னு விக்ரமன் கிட்ட கேட்டு சொல்லுங்கப்பா.
Rate this:
0 members
0 members
11 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in