Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஜுனியர் சூப்பர் சிங்கர் ஆனார் ஆஜித்! ரூ.60 லட்சம் வீடு பரிசு!

30 அக், 2012 - 11:15 IST
எழுத்தின் அளவு:

விஜய் டி.வி. நடத்திய சூப்பர் சிங்கர் ஜுனியர்-3 பாட்டுப் போட்டியில் சிறந்த பாடகராக ஆஜித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. விஜய் டிவியில் கடந்த ஓராண்டாக நடந்து வந்த சூப்பர் சிங்கர் - 3 பாட்டுப்போட்டி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து ஐந்து இறுதிப்போட்டியாளர்கள் பிரகதி, சுகன்யா, கவுதம், ஆஜித், யாழினி பாடுவதை ரசித்தார். போட்டியாளர்கள் சேலஞ்சிங் சுற்று மற்றும் பிரீ ஸ்டைல் சுற்றில் தலா இரண்டு பாடல்கள் பாடினர்.

போட்டியின்போதே ரசிகர்கள் எஸ்.எம்.எஸ். மற்றும் இணையதளத்தின் மூலமாக இளைய பாடகர்களுக்கு ஓட்டளித்து வந்தனர். போட்டி முடிவடைந்ததும் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறி வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அறிவித்தார். சூப்பர் சிங்கர் ஜுனியர் 3 போட்டியில் முதல்பரிசு பெற்ற வெற்றியாளராக ஆஜித் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஸ்ரீபெரும்புதூர் ஒரகடத்தில் 3 படுக்கைகளுடன் கூடிய சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டின் சாவியை ரஹ்மான் வழங்கினார்.

இரண்டாவது இடத்தை பெற்ற பிரகதிக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தைப் பெற்ற யாழினிக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகை வழங்கப்பட்டது. மேலும் சுகன்யாவிற்கும், கவுதமிற்கும் தலா ரூ.2 லட்சம் பரிசுத்தொகையை விஜய் டிவி வழங்கியது. நிகழ்ச்சியில் பிரபல பாடகிகள் சித்ரா, மால்குடி சுபா, சுதா ரகுநாதன், விஜய பிரகாஷ், சீனிவாஸ், மனோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

Advertisement
ஜெயா டிவி புதிய தொடர் மாயா!ஜெயா டிவி புதிய தொடர் மாயா! விஜய் டி.வி.யில் வெங்கட்பிரபு தொகுத்து வழங்கும் கோலிவுட் கிங்! விஜய் டி.வி.யில் வெங்கட்பிரபு ...


வாசகர் கருத்து (50)

mohideen - Chennai ,இந்தியா
26 டிச, 2012 - 10:41 Report Abuse
 mohideen இங்கே தகுதி அடிப்படியில் தேர்வு நடக்கவில்லை, மக்களின் மனதில் நிர்ப்பர்வர்கள் மட்டுமே முதலிடம் பெறுவார்கள், அதன் அடிப்படையில் மக்களுக்கு பிடித்திட்ட நபராக ஆஜ்ஜித் வந்ததில் வியப்பில்லை ?. எம் ஜி ஆர் இடம் நடிப்பா இருந்தது ?. அவர் எப்படி இன்றும் மனதில் நிற்கிறாரே ?. அதேபோல தான் ஆஜ்ஜிதும். சின்ன பொடியன் தெரிந்த பாடல்களை பாடி எல்லோரையும் ஒட்டு போடா வைத்தான், இதில் எரிச்சல் படுவதை விட்டு வாழ்த்துங்கள் இந்த அதிஷ்ட நாயகனை. அதேசமயம் பிரகதி சூப்பர் சிங்கர் அதோடு அந்த ஐந்து பேருமே சூப்பர் தான், அதிஷ்டம் உள்ள நபர்களுக்கு இறைவன் தரும் பரிசுகளை யாராலும் தடுக்க முடியாது, இறைவன் தடுக்க நினைத்ததை யாராலும் கொடுக்கவும் இயலாது.
Rate this:
தமிழச்சி - madurai,இந்தியா
13 டிச, 2012 - 17:01 Report Abuse
 தமிழச்சி எல்லோரும் வெளி நாட்டு வாழ் இந்தியருக்கே ஆதரவா பேசுறீங்க . தமிழ்நாட்டு பையன் தான் வாங்கட்டுமே. the person u r denoting to is already wealthy. vijay tv gives the award in any program to the right person who deserve it. there is no doubt in it. they calculate even character.
Rate this:
சுரேஷ் USA - Chennai,இந்தியா
09 டிச, 2012 - 20:38 Report Abuse
 சுரேஷ் USA Who is this joker kathir
Rate this:
skv - singapore,சிங்கப்பூர்
08 டிச, 2012 - 08:49 Report Abuse
 skv பிரகதி முறையா கத்துண்டு பாடறா, ஆனால் ஆஜித் முறையாகவே கத்துக்கலை இருப்பினும் சிறப்பாகவே பாடினான் , இவ்ளோ சின்னவயசுலே ஹி இஸ் கிரேட் , பொருத்தமான தேர்வு, பிரகதியும் நெறைய வாங்கி ரெண்டாமிடம் வந்துருக்காளே
Rate this:
இம்மன் - chennai,இந்தியா
28 நவ, 2012 - 18:54 Report Abuse
 இம்மன் பிரகதி இஸ் தி best
Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film maayavan
  • மாயவன்
  • நடிகர் : சந்தீப் கிஷன்
  • நடிகை : லாவண்யா திரிபாதி
  • இயக்குனர் :சி.வி. குமார்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  Tamil New Film Oru Kathai Sollatuma
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in