லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 8ந் தேதி முதல் திருமணம் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. மங்களூரைச் சேர்ந்த ஸ்ரேயா அஞ்சன் நாயகியாகவும், டப்ஸ்மாஷ் பிரபலம் சித்து ஹீரோவாகவும் நடிக்கின்றனர். யாரடி நீ மோகினி, குட்டி ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹரின் இயக்க மேற்பார்வை செய்கிறார். ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு மேற்பார்வை செய்கிறார், மாஸ்டர் சேனல் நிறுவனம் தயாரிக்கிறது.
வேறொருவரை காதலிக்கும் ஹீரோயினும், வேறொரு பெண்ணை காதலிக்கும் ஹீரோவும் நிர்ப்பந்தம் காரணமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். அவரவர் ஜோடியை மறக்க முடியாமலும், திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியாமலும் தவிக்கிறார்கள். அவர்களது தவிப்பும், அவர்கள் எடுக்கும் முடிவும் தான் சீரியலின் கதை. விவாகரத்து செய்து விட்டு கணவன் மனைவியாக வாழ்கிறார்கள். சீரியலை பிரபலப்படுத்த முதல் மூன்று எபிசோட்களில் தற்போது பிசியாக இருக்கும் முன்னணி ஹீரோ ஒருவர் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.