அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? | நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' |
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டிடி. அவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, அன்புடன் டிடி, நிகழ்ச்சிகள் பெரிய அளவில் மக்களை கவர்ந்தது.
திருமணம் செய்தார், திடீரென விவாகரத்து செய்தார். சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தவர் திடீரென நடிகை ஆனார். சின்னத்திரையை விட்டு விலகி சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினார். கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாளமயம் படங்களில் நடித்து வருகிறார். தற்போது திடீரென மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
வருகிற 21ந் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பல போட்டிகளில் மோதும் நிகழ்ச்சி இது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.