தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
சின்னத்திரை ஏரியாவில் 1 மணி முதல் 3 மணி வரையிலான நேரத்தை நான்ப்ரைம் டைம் என்பார்கள். அதாவது இந்த நேரத்தில் மக்கள் அதிகமாக டி.வி.பார்க்க மாட்டார்கள். ஆனால் இந்த நேரத்திலும் மக்களை டிவி முன் உட்கார வைக்க விஜய் டிவி முயற்சித்து வருகிறது. அதனால் இந்த நேரத்தை விஜய் மேட்னி என்று அறிவித்து மெகா சீரியல்களை ஒளிபரப்புகிறது. அந்த வரிசையில் வருகிற திங்கள் முதல் (26ந் தேதி) இரண்டு புதிய தொடர்களை ஒளிரப்புகிறது. அது பற்றிய விபரம் வருமாறு:
அவளும் நானும்
இது இரட்டை சகோதரிகள் பற்றிய கதை. நிலா, தியா என்ற இரட்டை சகோதரிகள். இதில் நிலாவுக்கு பணக்கார பையன் பிரவீனுடன் திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் நிலா இன்னொருவரை காதலிக்கிறார். பெற்றோர் தாங்கள் பார்த்த மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் கடிதம் எழுதிவைத்து விட்டு வீட்டைவிட்டு ஓடுகிறார் நிலா. இதனால் குடும்ப மானத்தை காப்பாற்ற தியாவை, நிலா என்று கூறி தாங்கள் பார்த்த மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
தியாவின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது. ஓடிப்போன நிலா என்ன ஆனார் என்பதுதான் திரைக்கதை. நிலா, தியா என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மவுனிகா. திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பொன் மகள் வந்தாள்
ரோகிணிக்கு அன்பான பெற்றோர், சகோதரிகள் இருக்கிறார்கள். பணம் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் அவளுடடையது. ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு வேலை போகிறது. அக்காவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. தங்கையின் படிப்புக்கு பணம் வேண்டும். தத்தளிக்கும் குடும்பத்தை காப்பாற்ற தான் வாழ்ந்த சிறு நகரத்தை விட்டு சென்னைக்கு வருகிறார். இங்கு அவர் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. இதில் ரோகிணியாக ஆயிஷா நடிக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.