மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
விஜய் தொலைக்காட்சி புராணத் தொடர்களுக்கு முக்கியத்தும் தரும் அதே நேரத்தில் குடும்பத் தொடர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வந்திருக்கிறது கல்யாணமாம் கல்யாணம். நேற்று முதல் இந்த புதிய தொடர் ஒளிபரப்பை தொடங்கி உள்ளது. இதில் 7சி தொடரில் நடித்த ஸ்ரீத்து ஹீரோயின் கமலியாக நடிக்கிறார், அவருக்கு ஜோடி சூர்யாவாக தேஜா நடிக்கிறார். பிரபல இயக்குனர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜ், மவுலி ஆகியோரும் நடிக்கிறார்கள். பிரம்மா இயக்குகிறார். தொடரின் கதை இதுதான்.
கமலி, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண். உறவுகள் நிறைந்த குடும்ப வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். திருமணம் மற்றும் சடங்குகள் மீது அதீத நம்பிக்கையுடன் இருப்பவர். ஆனால், நாயகன் சூர்யாவோ பணக்கார வீட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்யாண வாழ்க்கையில் துளி கூட நம்பிக்கை இல்லாதவர். எப்போதும் பேஸ்புக் டுவிட்டர், பிசினஸ் என வாழ்கிறவர். பெண் பார்க்கும் படலத்திலேயே டைவர்சுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறவர்.
கமலியின் எளிமைக் குணத்தைக் கண்டு வியக்கும் சூர்யாவின் தாத்தா, அவனுக்கு கமலியைத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். திருமணத்தில் விருப்பமே இல்லாமல் இருக்கும் சூர்யா இதற்கு சம்மதிப்பாரா? சூர்யா, கமலி இடையே திருமணம் நடக்குமா? திருமணத்திற்கு பிறகு என்னென்ன நடக்கும் என்பது தான் தொடரின் கதை.