லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. குடும்ப பிரச்சினைகளை ஒரு தொகுப்பாளர் நடுவராக இருந்து தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி. பக்கத்து வீட்டு பிரச்சினைகளை உற்றுப்பார்க்கும் மனோரீதியான உணர்வுதான் இந்த நிகழ்ச்சிக்கு அடிப்படை ஆதாரம்.
2000-மாது ஆண்டில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அன்றைய பிரபல செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி. இந்த நிகழ்ச்சி பெண்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். நிர்மலா பெரியசாமியை விட லட்சுமி ராமகிருஷ்ணனின் அணுகுமுறை இன்னும் பிரபலமானது. "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...." "போலீசை கூப்பிடுவேன்..." என்று லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி சொல்லும் வாக்கியங்கள். வைரலாக பிரபலமானது.
போட்டி சேனல்கள் இந்த நிகழ்ச்சியை கிண்டல் செய்ததன் மூலம் நிகழ்ச்சி இன்னும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி நடக்கும்போதே சேனல் ஊழியர்கள் தாக்கப்பட்டதும். அவர்கள் போராட்டம் நடத்தியதுமான நிகழ்வுகளும் நடந்தது. குடும்ப விவகாரத்தை வீதிக்கு கொண்டு வருவதா என்ற விமர்சனங்கள் இந்த நிகழ்ச்சி மீது இருந்தாலும் கொலைகள் உள்பட மறைக்கப்பட்ட பல குற்றச் செயல்ககளை இந்த நிகழ்ச்சி வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
இடையில் சேனலுடன் கருத்து வேறுபாடு கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகை நடிகை சுதாசந்திரன் நடத்தினார் ஆனால் அது எடுபடவில்லை. அதனால் மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனே நடத்த தொடங்கினார். தற்போது 7 ஆண்டை கடந்து புதிய பொலிவுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கி உள்ளது.