ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு |
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர். பெரியவர்களுக்கு கலக்கப் போவது யாரு, அது இது எது என்ற பெயரில் காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதைப்போன்ற இது சுட்டீஸ்களுக்கான நிகழ்ச்சி. கடந்த சில மாதங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிச்சுற்றை நெருங்கி விட்டது. பல்வேறு சுற்றுக்களாக நடந்த இந்த நிகழ்ச்சியில் இதுவரை கலக்கி வந்த சுசில், மிருதுளாஸ்ரீ, ஹரித்திக்ஹாசன், ஆதேஷ், முகேஷ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர்.
இறுதி சுற்றுப்போட்டிகள் நாளை (செப்., 17, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் போட்டியாளர்கள் இரண்டு சுற்று ஷோலோ பெர்மான்சும், இரண்டு சுற்று ஜோடி பெர்மான்சும் செய்ய இருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வரும் சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள், தொலைக்காட்சியில் பார்க்கும் நேயர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் காமெடி கிங் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு ரோபோ சங்கர், நடிகை ரம்பா, தொகுப்பாளர் சிந்து ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி வந்துள்ளனர். நாளைய நிகழ்ச்சியில் தம்பி ராமைய்யா, சிங்கம் புலி உள்ளிட்ட காமெடி நடிகர்கள் சிலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.