கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
திரைப்பட நடிகையான சங்கீதா விஜய் டி.வியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதன் பிறகு புதுயுகம் தொலைக்காட்சியில் நட்சத்திர ஜன்னல் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இது திரைப்பட பிரபலங்களை ஸ்டூடியோக்களுக்கு அழைத்து வந்து உரையாடும் நிகழ்ச்சி. விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீண்கெண்ட் ஸ்டார் போன்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு முடிந்தது.
இப்போது இதன் இண்டாம் சீசன் தொடங்குகிறது. இதனையும் சங்கீதா தொகுத்து வழங்குகிறார். வருகிற 27ந் தேதி ஒளிபரப்பு தொடங்குகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதுகுறித்து சங்கீதா கூறும்போது: நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்தது. இயக்குனர் பாலா, சிம்பு ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஹைலைட்டாக அமைந்தது. நான் அடிப்படையில் திரைப்பட நடிகை என்பதால் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்திச் செல்ல முடிந்தது. சிறிய இடைவெளிக்கு பிறகு சீசன் 2 தொடங்குகிறது. இதில் சில புதுமையான திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். சில எபிசோட்களில் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்பதைகூட சஸ்பென்சாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறோம். என்றார்.
முதல் நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா கலந்த கொள்கிறார். அடுத்த நிகழ்ச்சியில் விக்ரம் வேதா இயக்குனர்கள் புஷ்கர்,காயத்ரி கலந்து கொள்கிறார்கள்.