Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஒரு விவசாய நிகழ்ச்சி

28 ஜூலை, 2017 - 14:48 IST
எழுத்தின் அளவு:
Agri-programme-to-make-challange-for-bigboss

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிதான் இப்போதைக்கு தமிழ் சேனல்களில் நம்பர் ஒண் நிகழ்ச்சி. தினமும் 2 கோடி பேரும், கமல் தோன்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 4 கோடி பேரும் பார்ப்பதாக சொல்கிறார்கள். 14 செலிபிரிட்டிகள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பின்றி வாழ்வதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.


கோடிக் கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்தபோதும் நிகழ்ச்சி பற்றிய விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. நாடு இருக்கிற நிலைக்கு இந்த மாதிரி நிகழ்ச்சி தேவையா? என்றும் கலாச்சார சீரழிவை விதைக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.


இந்த நிலையில் இதே கான்செப்ட்டில் ஒரு விவசாய நிகழ்ச்சியை தயாரிக்க இருக்கிறார்கள். 5 ஏக்கர் நிலத்தை சுற்றி உயரமாக தடுப்பு அமைக்கிறார்கள். அதற்குள் சில குடிசைகள் ஒரு பம்பு செட்டு, கயிற்று கட்டில் போடுகிறார்கள். படித்த இளைஞர்கள், பெண்கள் 14 பேர் சீர்படுத்தப்பட்ட இந்த வயலில் நாற்று நடுவதில் தொடங்கி கதிர் அறுவடை செய்யும்வரை அங்கு தங்கிருக்க வேண்டும். அவர்களே நாற்றுநடுவது, களைபறிப்பது, உரமிடுவது, நீர் பாய்ச்சுவது என்று அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும். யார் கடைசி வரை தாக்குபிடித்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதுதான் நிகழ்ச்சியின் கான்செப்ட்.


காஞ்சிபுரம் அருகே 5 ஏக்கர் விவசாய நிலத்தில் தடுப்பு மற்றும் குடிசைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 5 கேமராக்கள் கொண்டு இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்கிறார்கள். விவசாயம் பற்றி நன்கு அறிந்த ஒரு திரைப்படக் கலைஞர் நிகழ்ச்சியை நடத்துகிறார். தற்போது இதற்கான ஆட்கள் தேர்வும் நடக்கிறது. ஒரு சில நடிகர்களும் இதில் இடம்பெறுகிறார்களாம். நம்ம மூவீஸ் சார்பில் ஆர்கே தயாரிக்கிறார். திரைப்படக் கல்லூரி மாணவர் அன்பரசன் இயக்குகிறார். மக்கள் டி.வியில் ஒளிபரப்பாகலாம் என்று தெரிகிறது.


Advertisement
பிக்பாஸ் எதிரொலி: குட்டி பத்மினி சீரியல் தள்ளிவைப்புபிக்பாஸ் எதிரொலி: குட்டி பத்மினி ... யாருக்கும் பயம் இல்லை: பிக் பாசில் தாக்கு பிடித்து நிற்பேன்: பிந்து மாதவி யாருக்கும் பயம் இல்லை: பிக் பாசில் ...


வாசகர் கருத்து (14)

Baskaran Seenu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09 ஆக, 2017 - 10:40 Report Abuse
Baskaran Seenu நல்ல சிந்தனை. வாழ்க வளமுடன்.
Rate this:
Pks Sharma - coimbatore,இந்தியா
02 ஆக, 2017 - 18:28 Report Abuse
Pks Sharma இது ஒரு அருமையான நிகழ்ச்சி .ஆவலுடன் இருக்கிறது இதில் கலந்து கொள்ள.இதில் கலந்து யாதேனும் வழிகள் உண்டா .
Rate this:
Sutha - Tirunelveli,இந்தியா
29 ஜூலை, 2017 - 10:23 Report Abuse
Sutha Indha show la yepti participate panradhu... Na indha show la kalandhukanum... Kalandhukka mudiuma?
Rate this:
Mrs. PSreelakshmi - Haugesund,நார்வே
29 ஜூலை, 2017 - 08:51 Report Abuse
Mrs. PSreelakshmi சபாஷ் சரியான போட்டி
Rate this:
29 ஜூலை, 2017 - 08:03 Report Abuse
KanmaniLatha arputhamana visayam
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal
  Tamil New Film Kaala
  • காலா
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ஹூயூமா குரேஷி
  • இயக்குனர் :பா.ரஞ்சித்
  Tamil New Film JagaJaala Killaaddi
  • ஜகஜால கில்லாடி
  • நடிகர் : விஷ்ணு விஷால்
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :எழில்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in