தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை சீரியலில் இரண்டாவது நாயகியாக நடித்து வருபவர் ஜனனி. இதுபற்றி ஜனனி கூறும்போது...
நான் மாப்பிள்ளை சீரியலில் கமிட்டாவதற்கு முன்பு ஐந்து வருடங்களாக கோவையில் தொகுப்பாளினியாக இருந்து வந்தேன். அதனால் எனக்கு கேமரா பயம் கிடையாது. ஆனால் நடிப்பு என்று வருகிறபோது கேமராவை எப்படி எதிர்கொள்வது, உடன் நடிப்பவர்களுடன் எந்தமாதிரி நடிப்பது என நிறைய விசயங்களை மாப்பிள்ளை சீரியலில்தான் கற்றுக்கொண்டேன்.
சோசியல் மீடியாவில் மூன்றே வாரத்தில் என்னை தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமானது. அவர்கள் எனது நடிப்பு குறித்து கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள். முக்கியமாக மேக்கப் அதிகம் போட வேண்டாம் என்கிறார்கள். மேக்கப் இல்லாமல் இருந்தாலே அழகாக இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் திருமணம் போன்ற சீன்களில் கிராண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே மேக்கப் போடுவேன். மற்ற சீன்களில் குறைவாகவே மேக்கப் போட்டு நடிக்கிறேன்.
மேலும், மாப்பிள்ளை சீரியலில் முதல் நான்கு எபிசோடுக்கு வேறு ஒருவர் தான் எனக்கு டப்பிங் கொடுத்தார். எனது குரலை ஐந்து வருடங்களாக கேட்டு வந்த கோவை ரசிகர்கள், நன்றாக நடிக்கிறீர்கள். ஆனால் வாய்ஸ் வேற மாதிரியாக இருக்குதே என்று சொன்னார்கள். அதனால், பின்னர் எனக்கு நானே டப்பிங் பேசத் தொடங்கினேன்.
முதலில் எனக்கு சரியாக டப்பிங் வரவில்லை. விளம்பரங்களுக்கு டப்பிங் கொடுத்த அனுபவம் மட்டுமே இருந்தது. அதனால் மற்ற டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் பேசியதை கேட்டு கற்றுக்கொண்டேன். இப்போது எனது நடிப்பும், டப்பிங்கும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கும் நானே டப்பிங் பேசிய பிறகுதான் திருப்தியாக உள்ளது. இப்போதுதான் எனக்கென்று ஒரு அடையாளம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருப்பதாக உணர்கிறேன் என்கிறார் ஜனனி.