ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு |
சின்னத்திரையில் எப்போதுமே புராண மற்றும் பக்தி தொடர்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். தற்போது சின்னத்திரை சேலனல்களில் ஒளிபரப்பாகும் பெரும்பான்மையான பக்தி மற்றும் புராண தொடர்கள் இந்தியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் டப்பிங் ஆகும். நேரடி புராண தொடர்கள், பக்தி தொடர்கள் மிகவும் குறைவே.
தமிழ் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக தமிழ் கடவுள் முருகனின் கதையை தமிழ் கடவுள் முருகன் என்ற பெயரில் பிரமாண்ட பக்தி தொடராக தர இருக்கிறார்கள். இதற்கான படப்பிடிப்புகள் சத்தமின்றி நடந்து வருகிறது. முருகனாக நடிப்பவர் ஒரு முக்கிய திரைப்பட நடிகர் என்றும் கூறப்படுகிறது. நவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகளை பிரமாண்ட படுத்துகிறார்கள். இந்த தொடரை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி ஒளிபரப்பு தொடங்க இருக்கிறார்கள்.
"முருகனின் கதை எப்போதுமே தமிழக மக்களுக்கு மிகவும் பிடிக்கும். முருகன் கதையில் தயாரான படங்கள் அனைத்துமே தமிழ் நாட்டில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த பக்தி தொடரும் மிகுந்த வரவேற்பை பெறும்" என்கிறது சேனல் தரப்பு. சமீபத்தில் வெளியான இதன் டீசர் பெரும் வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.