ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, கிங் ஆப் டான்ஸ் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் பிரியங்கா. தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ரொம்ப கலகலப்பாக தொகுத்து வழங்கும் பிரியங்கா, இணையதளத்தில் ரசிகர்கள் தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கும் அவ்வப்போது ஜாலியான பதில் கொடுப்பார். இந்த பிரியங்காவுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. இவரது கணவர் பெயர் பிரவீண்.
இந்தநிலையில், சமீபத்தில் ஒரு ரசிகர் பிரியங்காவின் டுவிட்டர் பக்கத்திற்குள் சென்று, உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் டைவர்ஸ் கன்பார்ம் என்று டுவிட் செய்து பிரியங்காவை டென்சன் செய்துள்ளார். அதையடுத்து, அந்த ரசிகருக்கு சரியான பதிலடி கொடுக்க தயாரான பிரியங்கா, மக்களே இவனை என்ன செய்யலாம் என்று கேட்டவர், அந்த ரசிகர் அஜித்தின் புகைப்படத்தை டிபி-யாக வைத்திருப்பதைப் பார்த்தவர், தல ரசிகர் என்ற ஒரே காரணத்திற்காக உன்னை சும்மா விடுகிறேன் என்று பதில் கொடுத்துள்ளார்.