மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு தொடரில் ஜோடியாக நடித்து வரும் அன்வரும், சமீராவும் நிஜத்திலும் காதலர்கள். தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே இருவரும் காதலர்கள். இருவருமே ஐதராபாத்தை சேர்ந்தவர்கள். இருவரும் இணைந்து தெலுங்கில் பல குறும்படங்களிலும், சில தொடர்களிலும் நடித்துள்ளனர். பகல்நிலவு தொடரில் முதலில் நடிக்க வந்தவர் அன்வர்தான். அதன்பிறகுதான் அவர் காதலி சமீராவையும் அழைத்து வந்தார்.
தற்போது இருவரும் இணைந்து ஒரு தொடரை தயாரிக்க இருக்கிறார்கள். ஜி மராட்டி சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்தி தொடரை ரெக்க கட்டி பறக்குது மனசு என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இதில் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. சமீரா மட்டுமே நடிக்கிறார். அன்வர் தயாரிப்பு பணிகளை மட்டுமே கவனிக்கிறார். தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஜீ தமிழ் சேனலில் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அன்வர் சமீரா திருமணம் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது.