ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மியூசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி மணிமேகலை. தற்போது பிளாக் ஷோ என்ற வித்தியசமான நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். மணிமேகலை பற்றிய லேட்டஸ்ட் தகவல் அவரைத் தேடி வந்த சில சினிமா வாய்ப்புகளை தவிர்திருப்பதுதான். எல்லோருமே சின்னத்திரை தொகுப்பாளினியாக வருவதே அப்படியே சினிமாவுக்கு செல்லத்தான். ஆனால் மணிமேகலை வந்த வாய்ப்புகளை தவிர்த்திருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:
நான் நிறைய படிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் குடும்பத்தின் கனவு. ஆனால் எனக்கு மீடியா மீது கவனம். நான் விஜேவாக செலக்ட் ஆனதை வீட்டில் சொன்னதும் எல்லோருக்குமே செம ஷாக். படிப்புதான் முக்கியம்னு சொன்னாங்க. படிப்பு கெடாம பண்றேன்னு சொல்லிதான் விஜே ஆனேன். எந்த சூழ்நிலையிலும் சீரியலிலோ, சினிமாவிலோ நடிக்க கூடாதுன்னு கண்டிஷன் போட்டாங்க, அதுக்கு ஒத்துக்கிட்டுதான் விஜே ஆனேன். குடும்பத்துக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்குத்தான் நடிப்பு பக்கம் போகவில்லை. விஜேவாக ரொம்பநாள் ஓட்ட முடியாது அதற்கு வேறொரு திட்டம் இருக்கு" என்கிறார் மணிமேகலை.
விரைவில் மணிமேகலைக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது.