Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அஜித்தின் தங்கையாக நடிக்க ஆசைப்படும் தொகுப்பாளினி அகல்யா

22 ஏப்,2017 - 10:13 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக சின்னத்திரையில் தொகுப்பாளர்கள் பலரும் சினிமாவில் ஹீரோவாகிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் ரம்யா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட சில தொகுப்பாளினிகளும் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணியில் ரம்யா நடித்தார். தனுஷின் ப.பாண்டியில் திவ்யதர்ஷினி நடித்தார். இவர்களைத் தொடர்ந்து இன்னொரு தொகுப்பாளினியான அகல்யா வெங்கடேசனுக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதுவும் அஜீத்தின் தங்கையாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டுமாம்.


இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போது நான் சில லைவ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு, ஆதித்யாவில் ஒளிபரப்பாகும் மாமோய் நீங்க எங்க இருக்கீங்க என்ற நிகழ்ச்சியிலும் டவுட் செந்திலின் மனைவி ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சி குட்டி குட்டியான எபிசோடு என்றாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை மையமாக வைத்து நடிப்பதால் நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்று வருகிறேன்.


அதனால், இனிமேல் நல்ல வாய்ப்புகள் வந்தால் சினிமா, சின்னத்திரை எதுவானாலும் நடிக்க திட்டமிட்டுள்ளேன். முக்கியமாக ஒரு படத்திலாவது அஜித்தின் தங்கையாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது பெரிய ஆசையாக உள்ளது. காரணம், நான் அஜித்தின் தீவிரமான ரசிகை. அவர் நடித்த ஒரு படத்தைகூட தவறவிடமாட்டேன். அதனால் எதிர்காலத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்புக்காக கண்டிப்பாக முயற்சி செய்வேன் என்கிறார் அகல்யா.


Advertisement
பிரமாண்ட செட்டில் தயாராகும் ‛யாரடி நீ மோகினி'பிரமாண்ட செட்டில் தயாராகும் ‛யாரடி ... மீண்டும் சீரியல் நாயகனான சஞ்சீவ் மீண்டும் சீரியல் நாயகனான சஞ்சீவ்


வாசகர் கருத்து (2)

cp -  ( Posted via: Dinamalar Android App )
24 ஏப்,2017 - 18:55 Report Abuse
cp ஒரு படத்த கூட விடாம பாத்த நீ உயிரோட இருக்கறதே பெரிய விஷயம். அவரோட 90% படத்த பாக்க முடியாத நாங்கல்லாம் உயிர கையில் புடிச்சிட்டு தியேட்டர விட்டு ஒடிவந்தோம்
Rate this:
Jaya Balan - Villupuram,இந்தியா
22 ஏப்,2017 - 11:28 Report Abuse
Jaya Balan உள்ளது உள்ள படியே சொல்றமாதிரி நல்ல தலைப்பு ஆசிரியரே..., சிறப்பு மிகச்சிறப்பு, ஆனால் இரண்டுகண்ணுல ஒன்னுல எண்ணெய்யும் ஒன்னுல மருந்தையும் ஊத்தறமாதிரி "4 வயது ஸ்கேட்டிங் வீராங்கனை விஜய்யுடன் சந்திப்பு" அப்படினுமட்டும் போட்டிங்களே ஆசிரியரே ஏன் அப்படி போட்டிங்க? சாதனை பேபி ஏ. பி. நேத்ரா வின் ஆசை என்ன தெரியுமா? தான் விஜய்யின் தீவீர ரசிகை என்றும் அவரை நேரில் சந்தித்தால் தாய்லாந்து போட்டியில் இன்னும் உற்சாகமாக விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார். அப்படியென்றால் நீங்கள் "தாய்லாந்தில் தங்கம் வெல்ல ஆசைப்படும் 4 வயது ஸ்கேட்டிங் வீராங்கனை விஜய்யின் தீவீர ரசிகை" அல்லது " 4 வயது ஸ்கேட்டிங் வீராங்கனை விஜயயை நேரில் சந்திக்க விருப்பம்" அல்லது " விஜய்யின் தீவீர ரசிகையான 4 வயது ஸ்கேட்டிங் சாதனை பேபி ஏ.பி.நேத்ரா" அப்படின்னுதானே ஏழுதி இருக்கணும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film bongu
  • போங்கு
  • நடிகர் : நட்ராஜ்
  • நடிகை : ருகி சிங்
  • இயக்குனர் :தாஜ்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film odi odi ulaikanum
  Tamil New Film Geminiganesanum Surulirajanum

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in