'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் |
குஷ்பு தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நந்தினி. இந்த தொடரில் மலையாள நடிகை மாளவிகா வேல்ஸ் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ், கன்னடத்தில் நேரடியாக தயாராகும் இந்த சீரியல் தெலுங்கு, மலையாளத்தில் டப் செயப்பட்டு வருகிறது. மேலும், இந்த நந்தினி சீரியல் தவிர அம்முவின்டே அம்மா என்ற மலையாள சீரியலிலும் தற்போது லீடு ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார் மாளவிகா வேல்ஸ்.
மேலும், மலையாளத்தில் தான் நடித்துள்ள சீரியல்களில் இதுவரை தனக்குத்தானே டப்பிங் பேசியுள்ளாராம் மாளவிகா. ஆனால் இந்த நந்தினி சீரியல் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நிலையில், அவருக்கு இன்னொருவர்தான் டப்பிங் பேசுகிறாராம். மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடை பெறுவதால் அவருக்கு டப்பிங் பேச போதிய நேரம் கிடைப்பதில்லையாம்.
அது மட்டுமின்றி நந்தினி சீரியலில் நடிப்பதால் அவர் மலையாளத்தில் தற்போது நடித்து வரும் அம்முவின்டே அம்மா சீரியலுக்கும் டப்பிங் பேச அவருக்கு போதிய நேரம் கிடைக்கவில்லையாம். இதனால் தாய்மொழியான மலையாளத்தில் வெளியாகும் நேரடி தொடரிலும் தனக்கு வேறு நபர் டப்பிங் கொடுத்திருப்பதால் மனதளவில் வருத்தத்தில் உள்ளாராம் மாளவிகா வேல்ஸ்.