குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி | ஓடிடி நிறுவனங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வைக்கும் செக் | இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா |
குழந்தைகளை மையமாக கொண்ட தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தொடர்ந்து விஜய் டி.வியும் குழந்தையை மையமாக கொண்ட கதையுடன் களம் இறங்குகிறது. கிராமத்து பெண் குழந்தையின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது மெளனராகம் தொடர்.
கிராமத்தில் பாடித் திரியும் அந்த குழந்தையின் தந்தை அதற்கு நினைவு வரும் முன்பே காணாமல் போகிறார். நினைவு வந்ததும் தன் தந்தையை தேடி அந்த சிறுமி பயணப்படுகிற கதை. அவள் தன் தந்தையை கண்டு பிடித்தாளா? இல்லையா என்பது கதையின் முடிவு. சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவள் தந்தையை தேடுகிற கதைக்களம் விரிவாக இருக்கும்.
தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்த தொடர் வருகிற 24ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. மெளனராகம் மணிரத்னம் இயக்கத்தில் மோகன், ரேவதி நடித்த வெள்ளி விழா படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.