Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

புத்தாண்டு படங்கள், டிவியிலும் போட்டி

12 ஏப், 2017 - 13:43 IST
எழுத்தின் அளவு:
Tamil-New-year-competition-in-Television-also

ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் புத்தம் புதிய திரைப்படங்கள் வெளிவருவது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். அதேப்போல வீட்டிலுள்ள பெண்களுக்கு டிவியில் எந்தப் புதுப்படம் போடுவார்களோ என்ற ஆர்வம் இருக்கும். திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய படங்களைப் பார்க்க அவர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். தியேட்டர்களில் சரிவர ஓடாத சில படங்கள் கூட டிவியில் ஒளிபரப்பாகும் போது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். ஏன், இந்தப் படம் வெளியான போது ஓடவில்லை என்ற கேள்வியும் எழும். சில படங்கள் தியேட்டர்களை விட டிவிக்களில் ஒளிபரப்புவதற்கப் பொருத்தமான படங்களாகவும் இருக்கும்.

இந்த வருடத் தமிழ்ப் புத்தாண்டிற்கு மூன்றே மூன்று புதிய படங்கள்தான் திரைக்கு வருகின்றன. ஆனால், டிவிக்களில் புத்தம் புதிய படங்களைப் போட்டு தியேட்டர்களை விட கடும் போட்டியில் இறங்குகிறார்கள்.


விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படம், கார்த்தி, நயன்தாரா நடித்த காஷ்மோரா படம், மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம், விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படங்கள் தமிழில் உள்ள முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளன. ஒரே நாளில் இத்தனை புதிய படங்களை வீட்டிலேயே எந்த செலவும் இல்லாமல் உட்கார்ந்து பார்க்கும் நிலை வரும் போது தியேட்டர்களுக்கு எப்படி கூட்டம் வரும்.


அதிலும், பைரவா படம் வெளிவந்து மூன்று மாதங்களும், சைத்தான் படம் வெளிவந்து நான்கு மாதங்களும், காஷ்மோரா படம் வந்து ஆறு மாதங்களும்தான் ஆகின்றன.


புதிய படங்களை ஆறு மாதங்களுக்குள் டிவியில் ஒளிபரப்புவார்கள் என்ற எண்ணம் மக்களிடம் அதிகமாக உள்ளது. அப்படியிருக்கும் போது ஒரு படத்திற்கு ஆயிரம் ரூபாய் செலவழித்து அவர்கள் ஏன் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கப் போகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்குப் பிறகாவது டிவியில் ஒளிபரப்பும் நிலை வந்தால் தான் சில பெரிய நடிகர்களின் படங்களுக்கும் தியேட்டர்களுக்குக் கூட்டம் வரும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in