அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
விஜய் டிவியில் திவ்யதர்ஷினி நடத்தி வந்த காபி வித் டிடி நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல் அன்புடன் டிடி என்ற பெயர் மாற்றத்துடன் புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாக உள்ளது. பிரபலங்களுடன் ஜாலியாக கலந்துரையாடி வந்த டிடி, அதையே இப்போதும் தொடர்கிறார் என்றாலும், இன்னும் சுவையாக கலந்து ரையாடப்போகிறாராம்.
அப்படி அவர் நடத்தும் அன்புடன் டிடி நிகழ்ச்சியில் முதல் விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொள்கிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராக பிரபலமாகி சினிமாவுக்கு வந்து இப்போது வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன் இந்தநிகழ்ச்சியில் டிடியின் கேள்விகளுக்கு ரொம்ப ஜாலியாக பதிலளித்திருக்கிறாராம். அந்த நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
அதையடுத்து, டிடியுடன் நின்று தான் எடுத்துக்கொண்ட செல்பியை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், நான் பெரும்பாலும் யாருடனும் செல்பி எடுக்க மாட்டேன். ஆனால் டிடியுடன் செல்பி எடுக்க வேண்டும் போல் தோன்றியது என்று குறிப்பிட்டுள்ளார்.