மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
விஜய் தொலைக்காட்சியில் திவ்யதர்ஷினி நடத்தி வந்த காபி வித் டிடி நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலமாகியிருந்தது. சினிமா செலிபிரிட்டிகளை பேட்டி காணும் அந்த நிகழ்ச்சியில், நட்சத்திர தம்பதிகளும் பங்கேற்று வந்தனர். அவர்களிடம் இனிமையாக, கலகலப்பாக பேசி அந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வந்தார் டிடி. ஆனால் திடீரென்று அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அதையடுத்து அச்சம் தவிர் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த டிடி, தனுஷின் பவர் பாண்டி படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமா பிரபலங்களை டிடி நேர்காணல் செய்யும் அந்த நிகழ்ச்சி ஏப்ரல் 14-ந்தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. முன்பு நடத்தியதில் இருந்து சில மாற்றங்களுடன் காபி வித் டிடி என்பதையும் மாற்றி அன்புடன் டிடி என்று அந்நிகழ்ச்சியை புதிய வடிவில் வழங்கப்போகிறார் டிடி.